உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொரோனாவால் இறந்த பெற்றோர் :மனம் தளராத மாணவர் தேர்ச்சி

கொரோனாவால் இறந்த பெற்றோர் :மனம் தளராத மாணவர் தேர்ச்சி

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, சின்னக்கவுண்டம்வலசு, சக்தி நகரை சேர்ந்தவர் திருவருட்செல்வன், 17. இவரின் பெற்றோர் புகழேந்திரன், மாலதி ஆகிய இருவரும் கொரோனா தொற்று தாக்கி இறந்தனர். பெற்றோரின் ஆதரவை இழந்த திருவருட்செல்வன், தனது சகோதரி லாவண்யாவுடன், அவரது தாய்மாமா வேல்முருகன் பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் வேல்முருகன், கிடைக்கும் சொற்ப வருமானத்தில், இருவரையும் படிக்க வைத்தார். லாவண்யா, காங்கயத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், இளங்கலை வணிகவியல் முதலாண்டு படித்து வருகிறார். கெட்டிச்செவியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த திருவருட்செல்வன், பிளஸ் 2 தேர்வெழுதி, 479 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார்.திருவருட்செல்வன் கூறுகையில், ''பெற்றோரை இழந்தது, மிகவும் கஷ்டம் என்ற போதிலும், வாழ்க்கையில் முன்னேற வேண்டியது காலத்தின் அவசியமாக இருக்கிறது. விமான தொழில்நுட்பம் படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது; என் உயர்கல்விக்கு உதவினால் நன்றாக இருக்கும்,'' என்றார். உதவிட விருப்பமுள்ளோர், 93607 45057 என்ற எண்ணில்தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி