உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அதிர்ச்சி அளித்த பெரியாயிபாளையம் அரசுப்பள்ளி

அதிர்ச்சி அளித்த பெரியாயிபாளையம் அரசுப்பள்ளி

திருப்பூர்;தேர்ச்சி விகிதத்தில் அசத்தி வந்த, பழங்கரை பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளியில், இம்முறை, 60 பேர் தோல்வியடைந்திருப்பது, பெற்றோர் மற்றும் உள்ளூர்வாசிகளை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, பெரியாயிபாளையத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி, தேர்ச்சி விகிதம் மற்றும் மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்த விஷயங்களில், ஊர் போற்றும் வகையில் இருந்தது. 10ம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் இப்பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளியாக இருந்தது.கடந்த சில ஆண்டுகளாக, இப்பள்ளியின் தேர்ச்சி விகிதம், படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று வெளியான, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், இப்பள்ளி, 74 சதவீத தேர்ச்சி மட்டுமே பெற்றுள்ளது. தேர்வெழுதிய, 239 மாணவ, மாணவியரில், 179 பேர் தேர்ச்சி பெற்றனர். 60 பேர் தோல்வியடைந்தனர். இது, பெற்றோர் மற்றும் உள்ளூர்வாசிகள் மத்தியில் அதிர்ச்சி, ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.உள்ளூர்வாசிகள் சிலர் கூறியதாவது:அரசுப்பள்ளிகள் அளவில், சில ஆண்டுகளுக்கு முன், இப்பள்ளி சிறந்து விளங்கியது. பொதுத் தேர்வெழுதும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். கழுதை தேய்ந்து கட்டெறும்பானக் கதையாக, இம்முறை, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கவலையளிப்பதாக இருக்கிறது. மாணவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. எனவே, தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணங்களை ஆராய்ந்து, இப்பள்ளியை மீண்டும் கரைசேர்க்க ஆசிரியர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை