உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மாணவியருக்கு கவிதைப்போட்டி

 மாணவியருக்கு கவிதைப்போட்டி

உடுமலை; உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில், மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடந்தது.உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில், பசுமைக்குரல் பொதுநல அறக்கட்டளையின் சார்பில், இயற்கை சார்ந்த சூழலியல் கவிதை போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவியருக்கான பரிசளிப்பு விழா நடந்தது. கல்லுாரி இயக்குனர் மஞ்சுளா முன்னிலை வகித்தார். முதல்வர் பரமேஸ்வரி (பொறுப்பு) தலைமை வகித்தார்.சென்னை கூத்துப்பட்டறை அமைப்பைச்சேர்ந்த சுரேஷ்வரன், நிவேதா, இளம்கவி, யோகேஸ்வரன், பசுமைக் குரல் பொது நல அறக்கட்டளை அறங்காவலர் மகேந்திரன், அறக்கட்டளை உறுப்பினர்களும் விழாவில் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இளநிலை மூன்றாமாண்டு மாணவி அபினயதர்ஷினிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை, கம்ப்யூட்டர் பயன்பாட்டுத்துறை தலைவர் மணிமேகலை, பேராசிரியர்கள், சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் கோமதி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை