| ADDED : ஜூலை 14, 2024 12:53 AM
மெஷினில் கை சிக்கி தொழிலாளி பலிவெள்ளகோவில், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் வீரம்மாள், 64; இவர் ஓ.இ., மில் ஒன்றில், 23 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். நேற்று வழக்கம் போல பணியில் ஈடுபட்டிருந்தார். பஞ்சு அரைக்கும் மெஷினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சிக்கி கொண்ட பஞ்சை எடுத்த போது, மெஷினில் இடது கை முழுவதும் சிக்கி நசுங்கியது. தொடர்ந்து, கீழே விழுந்து தலையில் காயமடைந்தார். அவரை மீட்டு தனியார்மருத்துவமனையில் அனுமதித்து, பின் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். பரிசோதனையில் வழியில் இறந்தது தெரிந்தது. வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.மொபைல் போன் பறிப்பு; மூவர் கைதுநாகை மாவட்டத்தை சேர்ந்த சுஜித்பாபு, 20. திருப்பூர், பாரப்பாளையத்தில் தங்கி, பனியன் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நண்பருடன் நள்ளிரவில் நடந்துசென்ற இவரை வழிமறித்த கும்பல், இவர்களது செல்போன்களை வழிப்பறி செய்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார், கடலுாரை சேர்ந்த அரவிந்த், 21, புதுச்சேரியை சேர்ந்த சுனில்குமார், 19, தேனியை சேர்ந்த தாமரைச்செல்வன், 20 ஆகிய மூவரையும் கைதுசெய்தனர்; அவர்களிடமிருந்து இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.வீட்டு பூட்டு உடைத்து திருட்டுஅனுப்பர்பாளையம் நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் முருகேசன், 78; வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 9ம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மகளை பார்க்க பெங்களூரு சென்றார். நேற்று காலை வீடு திரும்பினார். வீட்டின்பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1.2லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. வேலம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.