உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

பல்லடம்; பல்லடம் அருகே பனப்பாளையத்தில் உள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமாகாளியம்மன் மற்றும் ஸ்ரீமாரியம்மன் கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழா விமரிசையாக நடந்தது.கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த, 24ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 2ம் தேதி கிராமசாந்தியும், மறுநாள் இரவு, 8.00 மணிக்கு, அம்மன் அழைப்பு மற்றும் கம்பம் அமைத்தல் நிகழ்ச்சிகளும் நடந்தன. தொடர்ந்து, பூவோடு, மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகளில், ஏராளமான பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.விழாவில், நேற்று காலை, 9.00 மணிக்கு, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்த பெண்கள், அம்மனுக்கு படையல் வைத்து வழிபாடு செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் மாகாளியம்மன், மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று, மஞ்சள் நீராடுதல், அபிஷேக மற்றும் அலங்கார பூஜைகளுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை