உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வழியெங்கும் குழி... வாகன ஓட்டிகள் கிலி

வழியெங்கும் குழி... வாகன ஓட்டிகள் கிலி

தெருவிளக்கு எரியவில்லை1.திருப்பூர் கே.பி.என்., காலனி, வி.கே.ஆர்., கார்டனில் புதிய தெரு விளக்கு கடந்த, எட்டு நாட்களாக எரியவில்லை. குப்பையை கொட்டி செல்கின்றனர். அசம்பாவிதம் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சுப்பு, கே.பி.என்., காலனி.2.பெரியாண்டிபாளையம், தனவர்ஷினி அவென்யூ மற்றும் சித்தி விநாயகர் கோவில் தெருவில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தெருவிளக்கு எரியவில்லை.- ரமேஷ் கண்ணன், பெரியாண்டிபாளையம்.ரோடு படுமோசம்அவிநாசி, வடுகபாளையம் கிராமம், பிச்சாண்டம்பாளையயம் செல்லும் ரோடு குண்டும் குழியுமாக படுமோசமாக உள்ளது. பல விபத்து நடந்து விட்டது. மக்கள் நலன் கருதி ரோட்டை சீரமைக்க வேண்டும்.- தனராஜ், பிச்சாண்டாம்பாளையம்.கடும் துர்நாற்றம்1.திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பின், உழவர் சந்தை ரோடு கழிவு நீர் தேங்கி, கடும் துர்நாற்றத்துடன் சுகாதார கேடாக உள்ளது. உடனே கழிவுநீரை அகற்ற வேண்டும்.- மனோகரன், திருப்பூர்.2.திருப்பூர், மூர்த்தி நகர் விரிவு பவானி நகர், 5வது வீதி கொங்கு மெயின் ரோட்டில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கழிவு நீரும் இருப்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.- செந்தில்குமார், கொங்கு மெயின் ரோடு.ஆங்காங்கே மண் மேடுதிருப்பூர், கே.எஸ்.சி., பள்ளி ரோட்டில் பல இடங்களில், குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகள் முறையாக மூடப்படாமல், ஆங்காங்கே மண் மேடாக உள்ளது. வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.- சத்யபாஸ்கர், திருப்பூர்.மின் கம்பத்தால் ஆபத்துதிருப்பூர், குறிஞ்சி நகரில் உள்ள மின்கம்பம் சிதிலமடைந்து, விழும் நிலையில் உள்ளது. விபத்து ஏற்படும் முன் மாற்ற வேண்டும்.- ஆறுமுகம், குறிஞ்சி நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி