உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜல்லி கிரஷர் ஆலைகள் மின் இணைப்பு துண்டிப்பு

ஜல்லி கிரஷர் ஆலைகள் மின் இணைப்பு துண்டிப்பு

உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் ஜல்லி கிரஷர் ஆலைகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதிக்கு முரணாக, அதிக திறனுள்ள இயந்திரங்கள் நிறுவி, பல ஆயிரம் டன் அரைக்கப்பட்டு, ஜல்லி, எம்-சாண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.உதாரணமாக, ஒரு மாதத்திற்கு, 68,000 டன் மட்டுமே அரைக்க அனுமதி பெற்ற நிறுவனம், ஒரு நாளைக்கு, 68,000 டன் வரை அரைக்கும் வகையில், அதிக உற்பத்தி திறனுள்ள இயந்திரங்களை நிறுவி, முறைகேடாக இயங்கி வருகின்றன. ஒவ்வொரு நிறுவனங்களும், கோடிக்கணக்கான ரூபாய் மின் கட்டணமும் செலுத்தியுள்ளன.இது குறித்து, உரிய ஆவணங்கள் அடிப்படையில், அப்பகுதி விவசாயிகள் புகார் அளித்தனர். மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ஆறு நிறுவனங்கள் இயங்க தடை விதித்து, மின் இணைப்புகளை துண்டிக்க அறிவுறுத்தியதால், மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை