உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிறுவனங்களில் வெப்ப அலை தடுப்பு

நிறுவனங்களில் வெப்ப அலை தடுப்பு

திருப்பூர் : அனைத்து வணிக நிறுவனம், கடைகளிலும் வெப்ப அலை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயக்குமார் அறிக்கை:திருப்பூர் மாவட்டத்திலுள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு, மோட்டார் போக்குவரத்து உள்பட அனைத்து நிறுவனங்களும், பணிபுரியும் தொழிலாளர்ககள் மற்றும் வந்து செல்லும் வாடிக்கையாளர்களுக்காக, வெப்ப அலை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.போதிய காற்றோட்ட வசதி, சுத்தமான கழிப்பிடம், குளியலறை வசதிகள் செய்யவேண்டும். பணியாளர் தங்குமிடம், சரியான இருக்கை வசதி, சுழற்சி முறையில் பணியாளர்களுக்கு ஓய்வு, சட்டரீதியான வேலை நேரத்தை அமல்படுத்தவேண்டும்.சுகாதாரமான குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவேண்டும். வெப்பத்தாக்கம் மிகுந்த நாட்களில், எலுமிச்சைச் சாறு, மோர், ஓ.ஆர்.எஸ்., கரைசல் கிடைக்கச் செய்யவேண்டும். அருகிலுள்ள மருத்துவமனையுடன் இணைந்து, அவசர சிகிச்சை மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யவேண்டும்.வெப்பதாக்கம் அதிகமுள்ள உணவு நிறுவனங்கள், பேக்கரி, குடோன்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நீர்மோர், குளிர் பானங்கள் வழங்கவேண்டும்; சீரான இடைவெளியில் ஓய்வு அளிக்க தவறக்கூடாது. இது குறித்து, தொழிலாளர் துணை, உதவி ஆய்வர்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வெப்ப அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் வணிகர் கூட்டமைப்பு தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை