உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பஸ் ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

உடுமலை;கொமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை - பழநிக்கு, மடத்துக்குளம், கொழுமம் என இரண்டு வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், உடுமலை - கொழுமம் தடத்தில் முக்கிய நகரமாக கொமரலிங்கம் உள்ளது.இந்த நகரம், அப்பகுதியிலுள்ள பல்வேறு கிராமங்களின் முக்கிய சந்திப்பாக உள்ளது. ஆனால், பஸ்கள் நின்று செல்ல பஸ் ஸ்டாப் மட்டுமே உள்ளது. இதனால், காலை, மாலை நேரங்களில் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் திணற வேண்டியதுள்து. எனவே, கொமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !