உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகரில் வீடு, கடைகளில் மழைநீர் புகுந்தது

மாநகரில் வீடு, கடைகளில் மழைநீர் புகுந்தது

திருப்பூர்:திருப்பூரில் நேற்று மாலை பெய்த மழையால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.திருப்பூரில் சில நாட்களாக, அவ்வப்போது திடீர் மழை பெய்துவ ருகிறது. நேற்று காலை முதல் மதியம் வரை, வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலை, 4:28 மணிக்கு, சடசடவென மழை பெய்யத்துவங்கியது. 5:00 மணி வரையிலான அரை மணி நேரத்துக்கு, பலத்த மழை பெய்தது.திடீரென பெய்த மழையால், வாகன ஓட்டிகள் ஆங்காங்கே ரோட்டோர கடைகளில் தஞ்சமடைந்தனர். ஈஸ்வரன் கோவில் வீதி, கே.எஸ்.சி., பள்ளி வீதி, சக்தி தியேட்டர் பகுதிகளில், ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.கடந்த 11ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை, 6:00 மணி முதல் மழை பெய்தது. வார விடுமுறைநாளான நேற்றும் மாலை நேரம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக சண்டே ஷாப்பிங் முடங்கியதால், வர்த்தகர்கள் முகம்வாடினர்.திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய மழை பெய்தாலும்கூட, மழை நீர் பெருக்கெடுத்து, அருகிலுள்ள கடைகளுக்குள் சென்றுவிடுகிறது.நேற்று சாக்கடை கழிவுநீர் பொங்கி, அப்பகுதியில் உள்ள நகைக்கடை, ஜவுளி கடைகளுக்கு புகுந்து, பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு சில பகுதிகளில் தாழ்வாக உள்ள வீடுகளில் கழிவு நீருடன் கலந்து மழை நீரும் புகுந்தது.இதனால் தாழ்வான பகுதியில் இருந்த வீடுகளில் வசிப்போர் பெரும் அவதிக்குள்ளாகினர். கோம்பைத் தோட்டம், ராஜீவ் நகர் பிரதான வீதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீரும் கழிவு நீரும் கலந்து புகுந்து வெளியேறியது.சில வீடுகளில் உட்புறம் தேங்கியும் நின்றது.மழை நின்ற பின் அவற்றை வாரியிறைத்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.மழையின் போது, ரோடுகளில் பெருக்கெடுத்த மழை நீர், ரோட்டோர வடிகால்களில் சென்று பாய்ந்தது. வடிகால்களில் கழிவுகள் தேங்கிய சில பகுதிகளில் இது தொடர்ந்து செல்ல முடியாமல் கழிவு நீருடன் கலந்து ரோட்டில் சென்று பாய்ந்தது. இதில் ஒரு சில பகுதிகளில் தாழ்வாக உள்ள வீடுகளில் கழிவு நீருடன் கலந்து மழை நீரும் புகுந்தது.இதனால் தாழ்வான பகுதியில் இருந்த வீடுகளில் வசிப்போர் பெரும் அவதிக்குள்ளாகினர். கோம்பைத் தோட்டம், ராஜீவ் நகர் பிரதான வீதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீரும் கழிவு நீரும் கலந்து புகுந்து வெளியேறியது. சில வீடுகளில் உட்புறம் தேங்கியும் நின்றது. மழை நின்ற பின் அவற்றை வாரியிறைத்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை