உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷன் அரிசி கடத்தல்: வாலிபர் கைது

ரேஷன் அரிசி கடத்தல்: வாலிபர் கைது

திருப்பூர்:ரேஷன் அரிசியை, டூவீலரில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து, டூவீலரை பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ராக்கியாபாளையத்தில் இருந்து கணியாம்பூண்டி செல்லும் ரோட்டில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். தகவலின் பேரில், அப்பகுதியில் உள்ள வீட்டில் சோதனை செய்தனர். ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டது தெரிந்தது. ஆயிரத்து, 70 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, டூம்லைட் மைதானத்தை சேர்ந்த சிவமணி, 34 என்பவரை கைது செய்து, டூவீலரை பறிமுதல் செய்தனர். வடமாநிலத்தினருக்கு விற்கும் நோக்கில் பதுக்கி வைத்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !