உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏவுகணை நாயகனை நினைவு கூர்கிறோம்!

ஏவுகணை நாயகனை நினைவு கூர்கிறோம்!

நல்லரசு என்னவென்று வழிகாட்டினாய்வல்லரசு ஆவோமென்று திடம் கூட்டினாய்பறப்பாய்... ஜெயிப்பாய்... சாதிப்பாய் எனதேசத்து இளைஞர்களுக்கு உரமூட்டினாய்'முடியாது என்ற சொல் அகராதியில் கிடையாதுமுயற்சி திருவினையாக்கும்; நமைக் கைவிடாது'என்று தன்னம்பிக்கையூட்டினாய்அக்னிச்சிறகே... அணையா விளக்கேஇந்தியத் திருநாட்டின் ஈடிலா உயிரேஅணுவும் உன் சொல் கேட்டதுஏவுகணையும் உன் கீழ்ப்படிந்ததுஅப்துல் கலாம் என்பது மந்திரச்சொல்புது ரத்தம் பாய்ச்சும் நிரந்தரச்சொல்வள்ளுவர் போல வாழ்ந்தவர் நீவிர்வாழும் கலையை உணர்ந்தவர் நீவிர்காலம் கடந்தும் நம் காலம் சொல்லும்கலாம்... கலாம்... கலாம்!அறிவியல் திறனில் சிறப்புற்றாய்ஆராய்ச்சியில் வலுப்பெற்றாய்இறையாண்மையை உணர்த்தினாய்ஈடற்ற தேசப்புதல்வனானாய்உதவினாய் அன்பின் ஊற்றாய்உலகுக்கெல்லாம் தலைவனானாய்ஐயமின்றி நாட்டை வலுவூட்டினாய்ஒழுக்கத்தில் ஒளிர்ந்தாய்ஓங்கு புகழ் வளர்த்தாய்அவ்வை போல் அறிவைப் பகர்ந்தாய்இஃதன்றோ இந்திய நாடென்றுதேச மக்களைப் பெருமிதம் கொள்ளவைத்தாய்!கலாம் என்றொலித்தால்எங்கள் சலாம் என்றென்றும் உனக்கு!கடின உழைப்பு - நேர்மைக்கு மாற்றுஎதுவும் இங்கு இல்லையே...எண்ணங்களே செயலாகுமேபெரும் கனவுகள் காண்போமேவாய்ப்புக்காக காத்திருக்காமல்வாய்ப்பை உருவாக்குவோமேகேள்விகள்தான் புத்தாக்கங்களின் ஊற்றுதேடல்கள்தான் புதுப்பாதைகளின் வழிபடிப்பது மட்டுமா கல்வி?படைப்பாற்றலும் அல்லவா!சிந்திக்'கலாம்'... சீர்துாக்'கலாம்'உருவாக்'கலாம்'... சாதிக்'கலாம்'எங்களிடம் விதைத்தாயேஅன்பின் இனிய கலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி