உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேகத்தடையால் விபத்து அபாயம்

வேகத்தடையால் விபத்து அபாயம்

பொங்கலுார்:திருப்பூர் - காங்கயம் ரோடு, முதலிபாளையத்திலிருந்து அவிநாசி பாளையம் வரை செல்லும் ரிங் ரோட்டில் பல இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஆனால், அவை பளிச்சென தெரியும் வகையில் வெள்ளை வர்ணம் பூசப்படவில்லை. இதனால், அருகில் வரும் வரை வேகத்தடை இருப்பதே கண்ணுக்குத் தெரிவதில்லை. திடீரென பிரேக் போடும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.விபத்து ஏற்படக்கூடாது என்பதற்காகவே வேகத்தடை அமைக்கப்படுகிறது. ஆனால், வேகத்தடையே விபத்தை ஏற்படுத்துவதாக இருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.நெடுஞ்சாலைத்துறையினர் தாங்கள் அமைத்த வேகத்தடைகளுக்கு உடனடியாக வெள்ளை வர்ணம் பூச வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ