உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வித்யாசாகர் பள்ளியில் சகோதயா சதுரங்க போட்டி

வித்யாசாகர் பள்ளியில் சகோதயா சதுரங்க போட்டி

திருப்பூர் : திருப்பூர், கூலிபாளையம் வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில், திருப்பூர் சகோதயா பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி, நேற்று நடந்தது.திருப்பூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த, 41 சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ந்த, 300 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில், 10 முதல், 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஐந்து சுற்றுக்களாக போட்டி நடந்தது.இன்டர்நேஷனல் ஆர்பிட்டர் உமாபதி நடுவராக பங்கேற்று சிறப்பித்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன், பள்ளியின் முதல்வர் சசிரேகா ஆகியோர் பாராட்டி, பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை