உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போதைப்பொருள் விற்பனையா? புகார் அளிக்க போலீஸ் அழைப்பு

போதைப்பொருள் விற்பனையா? புகார் அளிக்க போலீஸ் அழைப்பு

அனுப்பர்பாளையம் : சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, அனுப்பர்பாளையம் போலீஸ் உதவி கமிஷனர் நல்லசிவம், தலைமையில் போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, பாண்டியன் நகரில் நடந்தது.போதையால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அதில் இருந்து, மீள்வது குறித்து மருத்துவர்கள் மற்றும் மறுவாழ்வு மைய நிர்வாகிகள் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. ஏற்கனவே குடிபோதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்ட, 15 நபர்களை கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தங்கள் பகுதிகளில் ஏதேனும் சட்ட விரோதமான போதை பொருள் நடமாட்டம் மற்றும் விற்பனை குறித்த தகவல்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு தெரியப்படுத்தலாம்; உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டது.இதில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் லதா (அனுப்பர் பாளையம்), ஜெகநாதன் (திருமுருகன்பூண்டி) மற்றும் எஸ்.ஐ.,கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதி மொழி எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை