உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சமூக வலைதளத்தில் பழகி பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சமூக வலைதளத்தில் பழகி பெண்ணுக்கு பாலியல் தொல்லை

திருப்பூர்:ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் வடிவேல், 25. தனியார் நிறுவன ஊழியர். இவர் இன்ஸ்டாகிராம் சமூக வலை தளத்தில், திருமணமாகாத, 30 வயது பெண் ஒருவருடன் பழகி வந்தார். அப்பெண்ணுக்கு தொடர்ந்து பதிவுகள் அனுப்பி, நெருங்கிப் பழகியுள்ளார். அப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, வடிவேல், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.ஆனால், திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை. வடிவேல் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்காததால் பெண்ணின் குடும்பத்தார், வடிவேலு வீட்டுக்குச் சென்று பேசினர். இதனால் ஆத்திரமடைந்த வடிவேல் பெண்ணுக்கும் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் காங்கயம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, வடிவேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி