உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆர்.டி.ஐ., மாணவர் சேர்க்கை பள்ளிகளில் இன்று குலுக்கல்

ஆர்.டி.ஐ., மாணவர் சேர்க்கை பள்ளிகளில் இன்று குலுக்கல்

திருப்பூர்;இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கான குலுக்கல் இன்று, பள்ளிகளில் நடக்கிறது.குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் -2009ன்படி, சிறுபான்மையற்ற அனைத்து தனியார் பள்ளிகளிலும், நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீதம் ஒதுக்கீடு செய்யப் படுகிறது; வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.இத்திட்ட வழிகாட்டுதல் வழங்கப்பட்டு, 2013-14ம் ஆண்டு முதல், 25 சதவீதம் அளவுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தனியார் பள்ளிகளில், நிர்ணயிக்கப்பட்ட இடங்களில், 25 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில், 213 பள்ளி களில், தலா, 25 சதவீத மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதற்காக, இன்று காலை, 10:00 மணிக்கு, மாணவர் சேர்க்கைக்கான குலுக்கல் நடக்க உள்ளது.அதன்மூலமாக தேர்வாகும் மாணவ, மாணவியர், இத்திட்டத்தின் மூலமாக பள்ளிகளில் சேர்க்கப்படுவர்.விண்ணப்பித்துள்ள பெற்றோர், அந்தந்த பள்ளிகளில் இன்று நடக்கும் குலுக்கலில் கலந்து கொள்ள வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ