உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரியாணியில் மண்; கோபத்தில் கொலை?

பிரியாணியில் மண்; கோபத்தில் கொலை?

திருப்பூர் : திருப்பூர், கோல்டன் நகர், கருணாகரபுரி நகர் முதல் வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 30; பனியன் தொழிலாளி.நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு அருகே பேக்கரிக்கு வெளியே நண்பர் சிலருடன் அமர்ந்திருந்தார். டூவீலரில் வந்த, ஐந்து பேர் கொண்ட கும்பல் வாலிபரை சரமாரியாக வெட்டி கொன்றனர். தடுக்க முயன்ற நண்பரையும் தாக்கி விட்டு தப்பி சென்றனர். திருப்பூர் வடக்கு போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.முதல் கட்டமாக, அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராவை பார்வையிட்டு விசாரித்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில், உசிலம்பட்டி உள்ளிட்ட சில இடங்களுக்கு தனிப்படை விரைந்தனர்.போலீசார் கூறியதாவது:பனியன் தொழிலாளி கொலை தொடர்பாக, பாலகிருஷ்ணன், 24, பாண்டியராஜன், 30, கவிஷேக், 24, சக்தி சண்முகம், 27 என, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள சிவா, 24 என்பவரை தேடி வருகிறோம்.கொல்லப்பட்ட சதீஷ்குமார், பாலகிருஷ்ணன் உட்பட சிலர், நேற்று முன்தினம் மதியம், மது அருந்தி விட்டு, பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.அப்போது, சதீஷ்குமார் திடீரென்று எழுந்து சென்றபோது, பாலகிருஷ்ணன் சாப்பிட்டு கொண்டிருந்த பிரியாணியில் மண் விழுந்தது.இதுதொடர்பாக கேட்ட போது, சதீஷ்குமாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு, பின் அங்கிருந்து கலைந்து சென்றனர். இப்பிரச்னையை மையமாக வைத்து பாலகிருஷ்ணன் தனது நண்பர்களிடம் சொல்லி அழைத்து சென்று, சதீஷ்குமாரை வெட்டி கொலை செய்துள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை