உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவ, மாணவியருக்கான கோடை கால சிறப்பு முகாம்

மாணவ, மாணவியருக்கான கோடை கால சிறப்பு முகாம்

உடுமலை;உடுமலையில், மாணவ, மாணவியருக்கான கோடை கால சிறப்பு முகாம் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது.உடுமலை பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் ராஜயோக தியான நிலையம் சார்பில், மாணவர்களுக்கான கோடை கால சிறப்பு முகாம் கொழுமம் ரோடு, பீஸ்லேண்டில் வரும் 12ம் தேதி காலை, 9:00 மணி முதல் மதியம், 2:30 மணி வரை நடக்கிறது.இதில், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். நினைவாற்றலை ஊக்குவிக்கும் விளையாட்டுகள், திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள், தியானத்தின் அற்புத அனுபவங்கள், மொபைல் போன் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன.நிகழ்ச்சிக்கு, மாணவர்கள் பெற்றோருடன் வந்து பங்கேற்று பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !