உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அயோத்திக்கு ஸ்ரீ ராமர் திருவடி யாத்திரை

அயோத்திக்கு ஸ்ரீ ராமர் திருவடி யாத்திரை

அனுப்பர்பாளையம்:திருப்பூரில் இருந்து அகில பாரத இந்து மகா சபா சார்பில், அயோத்திக்கு வெள்ளியிலான ஸ்ரீராமர் பாதங்கள் யாத்திரை நேற்று துவங்கியது.அகில பாரத இந்து மகா சபா அமைப்பு சார்பில், அயோத்திக்கு திருப்பூரில் இருந்து ஸ்ரீ ராமரின் திருவடி யாத்திரை செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக பக்தர்கள் பங்களிப்புடன், 2.5 கிலோ எடையில் வெள்ளியிலான இரு பாதங்கள் தயாரானது. திருவடி யாத்திரை செல்லும் நிகழ்ச்சி நேற்று அனுப்பர் பாளையம் புதுாரில் நடந்தது. அங்குள்ள கருப்பராயன் கோவிலில் வெள்ளியில் தயார் செய்யப்பட்ட ஸ்ரீ ராமர் பாதங்களை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின், வெள்ளி பாதங்கள் வாகனத்தில் வைத்து யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டது. யாத்திரை இங்கிருந்து, ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து, அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு செல்கிறது. சிறப்பு பூஜை நிகழ்ச்சியில், தேசிய தலைவர் சக்கரபாணி மகாராஜ், மாநில தலைவர் பாலசுப்பிரமணியம், மாநில இளைஞர் அணி தலைவர் சுபாஷ், திருப்பூர் மாவட்ட தலைவர் வல்லபை பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு

வெள்ளியில் செய்யப்பட்ட ஸ்ரீ ராமரின் பாதங்களை, வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. போலீசார் அனுமதி கொடுக்காததால், ஊர்வலமின்றி வாகனத்தில் யாத்திரையாக எடுத்து செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை