உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கத்திக்குத்து: 2 பேர் கைது

கத்திக்குத்து: 2 பேர் கைது

திருப்பூர், : மது போதையில், தகராறு செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் வளையங்காடு, 5வது வீதியை சேர்ந்தவர் பழனிசாமி, 85; தொழிலாளி. இவரது வீட்டு அருகே இருக்கும் ஜெயராஜ் என்பவருடன் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள மதுக்கடைக்கு மது அருந்த சென்றார். கடையில் அமர்ந்திருந்த வாலிபர், இருவர், முதியவர் பழனிசாமியிடம் போதையில் தகராறு செய்தனர். தொடர்ந்து, வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், பழனிசாமியை குத்தினர்.காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் திண்டுக்கல்லை சேர்ந்த வெண்டிமுத்து, 23, நண்பர் முல்கேஷ், 19 என, இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை