உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வித்யா விகாஸ் பள்ளி மாணவர்கள் அசத்தல்

வித்யா விகாஸ் பள்ளி மாணவர்கள் அசத்தல்

திருப்பூர் : திருப்பூர், குளத்துப்பாளையம், வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வில் அசத்தி, பாராட்டு பெற்றுள்ளனர்.இப்பள்ளி மாணவர் ஹரீஷ், கணக்குபதிவியல், வணிகவியல், பொருளியல் மற்றும் வணிகக்கணிதம் ஆகிய நான்கிலும் நுாற்றுக்கு நுாறும், 600க்கு, 595 மதிப்பெண் பெற்றும் மாவட்டத்தில், 3வது இடம் என பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.மாணவர், கவின், கணிதத்தில் சென்டம், 592 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் இரண்டாமிடம்; இவர், 99.75 பொறியியல் 'கட்ஆப்' பெற்றுள்ளார். மாணவி காவ்யா, 585 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில், 3வது இடம். கணினி அறிவியல் தேர்வில், 16, வணிகவியலில் 8, கணிணி பயன்பாட்டில், ஆறு, பொருளியலில் ஐந்து, கணக்கு பதிவியலில், மூன்று, கணிதத்தில், இரண்டு, வணிக கணிதத்தில் ஒருவர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர். சாதித்த மாணவ, மாணவியர், சிறப்புடன் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பள்ளி தாளாளர் கனகரத்தினம் தண்டபாணி, நிர்வாக அலுவலர் சிவகுருநாதன், துணைத்தாளாளர் சுபாஷ் தண்டபாணி மற்றும் தரணிதரன் தண்டபாணி, பள்ளி முதல்வர் தனபாக்கியம் உள்ளிட்டோர் நினைவுப்பரிசு வழங்கி, பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி