உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பசுந்தாள் உரம் சாகுபடி செய்ய மானிய விலையில் விதைகள்

பசுந்தாள் உரம் சாகுபடி செய்ய மானிய விலையில் விதைகள்

உடுமலை;உடுமலை வட்டாரத்தில் நெல் சாகுபடி நிலங்களில், பசுந்தாள் உரம் சாகுபடி செய்ய வேளாண் துறை சார்பில் விதைகள் வழங்கப்படுகிறது.உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:உடுமலை வட்டாரம், கல்லாபுரம் நெல் சாகுபடி பகுதியில், மண்ணில் உயிர்ம கரிமச்சத்தினையும், பயிர் மகசூலையும் அதிகரிக்க, முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ், பசுந்தாள் உர விதை வினியோகம் செய்யப்படுகிறது.பசுந்தாள் உர விதைகளை நெல் வயலில் விதைத்து, 40 முதல், 45 நாட்களில் நன்கு மடக்கி உழவு செய்வதால், மண் வளம் காக்கப்படுகிறது.மண் அரிப்பு தடுக்கப்பட்டு, நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கிறது. மண்ணில் கரிமச்சத்து அதிகரிப்பதோடு, பசுந்தாள் உரச்செடியின் வேர்கள் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள், சத்துக்களை வெளிவிடாமல், ஊக்குவிக்கியாக செயல்படும்.பசுந்தாள் உர விதைகள், உடுமலை வட்டாரத்திற்கு, 75 ஏக்கர் பரப்பளவில் வினியோகிக்கப்பட உள்ளது.இத்திட்டத்தின் கீழ், தக்கைப்பூண்டு விதை, 50 சதவீதம் மானியத்தில், ஒரு ஏக்கருக்கு, 20 கிலோ வினியோகம் செய்யப்படுகிறது.சிறு, குறு, ஆதிராவிடர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற, உழவர் செயலியில் பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை