உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோடை கால தடகள பயிற்சி முகாம்

கோடை கால தடகள பயிற்சி முகாம்

உடுமலை:உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், மாணவர்களுக்கான இலவச தடகள பயிற்சி முகாம் நடக்கிறது.கோடை காலத்தில், பள்ளி மாணவ, மாணவியர்க்கு தடகள பயிற்சிகளை பல்வேறு அமைப்புகள் அளிக்கின்றன. அவ்வகையில், திருப்பூர் தடகள சங்கம் மற்றும் உடுமலை அரசு கலைக்கல்லுாரி சார்பில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு இலவச தடகள பயிற்சி முகாம், மே 1 துவங்கி 15 நாட்கள் நடக்கிறது.முகாமில் அரசு கலைக்கல்லுாரி முதல்வர் கல்யாணி, தடகள சங்கத்தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் முத்துக்குமார் தலைமை வகித்தனர்.மேலும், தன்னார்வலர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள், தடகள ஆர்வலர்கள், கல்லுாரி முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.பயிற்சியில் பல்வேறு பள்ளி, கல்லுாரிகளைச்சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு இரண்டு வேளைகளும் சிற்றுண்டிகளும் வழங்கப்படுகின்றன. பயிற்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூர் தடகள சங்கத்தினர், உடுமலை அரசு கல்லுாரி உடற்கல்வித்துறையினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !