திருப்பூர்;திருப்பூர் அருகே வஞ்சிபாளையத்தில் இருந்து அவிநாசி செல்லும் ரோட்டில் சின்ன கருணைபாளையத்தில், 'சன் ஷைன் லக்ஷூரி வில்லாஸ்' துவக்கப்பட்டது.இதனை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் திறந்து வைத்தார். மணி அப்பேரல்ஸ் மற்றும்டாலர் டெக்ஸ்டைல் பிராசசிங் மில்ஸ் நிறுவனர் மற்றும் தலைவர் பாலசுப்பிரமணியன், கிளப் ஹவுஸை திறந்து வைத்தார்.பப்பீஸ்குழும செயல் இயக்குநர் செல்வீஸ்வரி, மணி அப்பேரல்ஸ் இயக்குநர் மகேஷ்வரி, கே.எம். நிட்வேர் இயக்குநர் மகேஷ்வரி, எஸ்ட்டீ எக்ஸ்போர்ட்ஸ் செயல் இயக்குநர் லீலாவதி, கார்மன்ட் மந்த்ரா இயக்குநர் ஷிகா அகர்வால், தீபம் நிட் காம்பாக்டர் இயக்குநர் மாலதி குத்துவிளக்கு ஏற்றினர்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமாரன், செயற்குழு உறுப்பினர் பிரேம் அகர்வால் மற்றும் தீபம் செந்தில்குமார், யுனைடெட் மனோகர் உட்பட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.நிர்வாகிகள் கூறியதாவது:சன்ஷைன் லக்ஷூரி வில்லா 9.4 ஏக்கரில் அமைந்துள்ளது. 16 சென்ட் முதல் 27.5 சென்ட் வரை 26 சைட் மட்டுமே உள்ளது. விநாயகர் கோயில், நீச்சல் குளம், ஆம்பி தியேட்டர், கேம்பஸ் காமன் மியூசிக் சிஸ்டம், பேவர் பிளாக் ரோடு, 60 ஆயிரம் லி., டேங்க், அண்டர் கிரவுண்ட் கழிவுநீர் குழாய், எல் அண்ட் டி தண்ணீர் இணைப்பு வசதி.கிரிக்கெட், கால்பந்து மைதானம் உட்பட அனைத்து வசதிகளும் உள்ளன. கிளப் ஹவுஸில் இன்டோர் ஷட்டில் கோர்ட், தனி கிச்சன், ஸ்டோர் ரூம், கம்யூனிட்டி ஹால், இன்டோர் டைனிங், அவுட்டோர் டைனிங், ஜிம், மசாஜ் கிளப், பியூட்டி பார்லர், ரெக்ரியேஷன் சென்டர் உள்ளன. விவரங்களுக்கு 94421 02929, 87549 05896 ஆகிய எண்களில்அழைக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.