உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மா மரம் வெட்டாமல் தடுப்பு மறுநடவு மூலம் உயிர் காப்பு

மா மரம் வெட்டாமல் தடுப்பு மறுநடவு மூலம் உயிர் காப்பு

திருப்பூர்:வடிகால் பணிக்காக வெட்ட வேண்டிய மாமரத்தை, வேருடன் பெயர்த்து எடுத்து, மறுநடவு செய்த கணக்கம்பாளையம் ஊராட்சியை, பசுமை ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.திருப்பூர் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது ரத்னா நகர்; அப்பகுதியில், 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தார்ரோடும், மூன்று லட்சம் ரூபாயில் வடிகால் பணியும் நடக்க உள்ளது. ரோடு அமைக்க, நிலத்தை அளவீடு செய்த போது, தனியார் ஒருவர் வளர்த்த மாமரம் இடையூறாக இருந்தது.எட்டு ஆண்டுகளாக வளர்த்து, காய்பிடிக்கும் பருவம் என்பதால், மரத்தை வெட்ட வேண்டாமென, ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, அருகே உள்ள 'ரிசர்வ்' சைட்டில், குழி தோண்டி, மரத்தை வேருடன் பெயர்த்து எடுத்து மறுநடவு செய்துள்ளது.வேலை உறுதி திட்ட பணியாளர் மூலம், மரம் தழைக்கும் வரை தண்ணீர்விட்டு பராமரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தின் மரம் பாதுகாப்பு நடவடிக்கையை, பசுமை ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை