உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பணி நிரந்தரம் கேட்கும் டாஸ்மாக் ஊழியர்கள்!

பணி நிரந்தரம் கேட்கும் டாஸ்மாக் ஊழியர்கள்!

திருப்பூர்;'டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பை, வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும்' என, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் தமிழக சட்டசபை கூட உள்ளது. பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரிவோர், தங்களின் பணி பலன் மற்றும் பண பலன் சார்ந்த கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில், சி.ஐ.டி.யு., டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில், அரசுக்கு சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.அதன்படி, 'டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, சட்டப்படி அவர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும்' என, சங்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, முதல்வருக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் நடத்துவது; ஒருமித்த கருத்துடைய சங்கங்களை இணைத்து, கோரிக்கையை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவது எனவும் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை