உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மரங்களில் ஆணி அடிக்கும் கொடூர செயல்? தடுத்து நிறுத்த பசுமை ஆர்வலர்கள் வேண்டுகோள்

மரங்களில் ஆணி அடிக்கும் கொடூர செயல்? தடுத்து நிறுத்த பசுமை ஆர்வலர்கள் வேண்டுகோள்

திருப்பூர்:'திருப்பூர் நகரம் மற்றும் ஊரகப்பகுதிகளில் சாலையோரம் உள்ள மரங்களில் ஆணி அடித்து, விளம்பர பலகை வைக்கும் நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பசுமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.வெயிலின் உக்கிரம் வாட்டி வதைக்கும் நிலையில், மக்கள் மரங்களின் நிழல் தேடி அலைகின்றனர். இயற்கையின் இந்த சீற்றம், மரங்களை நட்டு வளர்ப்பதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் மரங்கள் வெட்டப்பட்டாலும் கூட, மாற்றிடத்தில் அதற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற யோசனை தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.இந்நிலையில், சாலையோரம் அடர்ந்து வளர்ந்துள்ள மரங்களில், விளம்பர பலகைகளை ஆணி அடித்து தொங்க விடும் செயலில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இது, பசுமை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சிந்தனை
மே 05, 2024 20:23

இதைப் பேசும் அன்பு இதயங்கள்.... ஆடு பன்றி மாடு கழுதை பூனை நாய் கோழி குருவி... என அள்ளித் தின்றுவிட்டு பேசுவதுதான் பகுத்தறிவு!!


சமீபத்திய செய்தி