உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண்ணை கீழே தள்ளி நகை பறித்த கும்பல் கைது

பெண்ணை கீழே தள்ளி நகை பறித்த கும்பல் கைது

பொங்கலுார் : பொங்கலூர் குருநாதம் பாளையத்தில் பெண்ணை கீழே தள்ளி நகை பறித்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.பொங்கலுார், குருநாதம்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மனைவி தனலட்சுமி, 52. கடந்த 22ல் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை கீழே தள்ளி ஒன்பது பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். அவிநாசி பாளையம் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.அவிநாசி பாளையம் சுங்கம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த ஆறு பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். விசாரணையில், நாகை மாவட்டம் தலைஞாயிறு ஆனந்த், 42 அமிர்த ரூபன், 28 கட்டை ரமேஷ், 40 மணிமாறன், 30 சுரேந்திரன், 31 மன்னார்குடியைச் சேர்ந்த சரிதா, 40 என்பதும், குருநாதம்பாளையத்தில் தனலட்சுமியிடம் நகை பறித்ததில் தொடர்புடைய கும்பல் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து, ஒன்பது பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

தொழிலாளர் போர்வையில் குற்றவாளிகள்

பொங்கலூர் குருநாதம்பாளையத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட திருடர்கள், திருப்பூர் மற்றும் நாச்சிபாளையம் பகுதியில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. குற்றவாளிகள் தொழிலாளர் போர்வையில் உலா வருவது உறுதியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை