உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனிதர்களுக்கு நிழல் தானே தந்தது; தீ வைக்க மனம் எப்படி வந்தது?

மனிதர்களுக்கு நிழல் தானே தந்தது; தீ வைக்க மனம் எப்படி வந்தது?

பொங்கலுார் : பொங்கலுார் அருகே நிழல் தந்த மரத்துக்கு தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பசுமை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பொங்கலுார் ஒன்றியம், டி.ஆண்டிபாளையத்தில் ஓடை புறம்போக்கில், நுாறு ஆண்டு பழமை வாய்ந்த மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தை அழிக்க வேண்டும் என்று சிலர் தொடர்ந்து முயற்சி வருகின்றனர். அடிக்கடி அந்த மரத்திற்கு தீ வைப்பதும், பின்னர் அது துளிர் விடுவதுமாக இருந்தது. தற்பொழுது அதிக அளவில் தீ வைத்ததால் மரம் பட்டு போய் விட்டது.நுாற்றுக்கணக்கான பறவைகளுக்கு வாழ்விடத்தையும், மனிதர் களுக்கு நிழலையும் மட்டுமே தந்த அந்த மரம் மனிதர்களுக்கு என்ன தீங்கு செய்தது. தீயிட்டு கொளுத்திய, கல் நெஞ்சம் படைத்தவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கையை வருவாய்த்துறையினர் எடுக்க வேண்டுமென, பசுமை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ