உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஞானசம்பந்தர் பள்ளி மாணவர்கள் அபாரம்

ஞானசம்பந்தர் பள்ளி மாணவர்கள் அபாரம்

திருப்பூர் : திருப்பூர், ஞானசம்பந்தர் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.இப்பள்ளி மாணவி சங்கவி, 600க்கு 591 மதிப்பெண் பெற்றுள்ளார். உயிரியல் பாடத்தில், 98 மதிப்பெண் பெற்றார். காங்கயம் தாலுகா அளவில், இம்மாணவி முதலிடம். மாணவன் சந்துரு, 589 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி தர்ஷினி, 582 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடம் பெற்றனர். தேர்வெழுதிய, 50 மாணவர்களில், 18 பேர் பல்வேறு பாடங்களில், 100க்கு, 100 மதிபெண் பெற்றுள்ளனர். 19 பேர், 500 மதிபெண்ணுக்கும் மேல் பெற்றுள்ளனர். தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி வழங்கிய ஆசிரியர்களை, பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி