உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாடிக்கையாளரை கவர்ந்த சின்ன வீடு உணவின் ருசி!

வாடிக்கையாளரை கவர்ந்த சின்ன வீடு உணவின் ருசி!

'வாடிக்கையாளர்களே வடிவமைத்த ஹாேட்டல், கிராமத்து சூழலில் அமர்ந்து உணவருந்தும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது' என பெருமிதம் தெரிவிக்கின்றனர், திருப்பூர், வீரபாண்டியில் செயல்படும் சின்ன வீடு ஓட்டல் உரிமையாளர் காயத்ரி கோபாலகிருஷ்ணன்.இது குறித்து, அவர் கூறியதாவது: பிரியாணி தான், 'டிரெண்ட்' என்ற நிலைக்கு மாற்றாக, நாட்டுக்கோழி, மட்டன் சட்டி சோறு, எங்களின் 'ஸ்பெஷல்'; சின்ன வெங்காயம், கடலை எண்ணெய் என, உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களை தான் பயன்படுத்துகிறோம்.கிச்சன் அளவில் மட்டுமே இருந்த ேஹாட்டல், வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவால், தென்னை மரங்கள் சூழ்ந்த, கிராமத்து மண் வாசனையுடன் கூடிய இயற்கை சூழலில், குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்தும் ஹாேட்டலாக உருவெடுத்துள்ளது.ஸ்விக்கி, சொமாட்டோ நிறுவனங்கள் வாயிலாகவும், திருப்பூரை சுற்றி, 15 கி.மீ., துாரத்துக்கு உணவு சப்ளை செய்கிறோம். வாடிக்கையாளர்கள் விரும்பும் உணவை, அவர்கள் எதிர்பார்க்கும் சுவை குறையாமல் வழங்கி வருவதால், கடந்த, 10 ஆண்டுகளாக தொழிலை வெற்றிகரமாக நடத்த முடிகிறது.விவரம் தேவைப்படுவோர், 95855 51455- என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி