உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாயும் நிலையில் மரங்கள்: பொதுமக்கள் திக்... திக்

சாயும் நிலையில் மரங்கள்: பொதுமக்கள் திக்... திக்

அவிநாசி:அவிநாசி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கால்நடை மருத்துவமனை அருகில் பாரதிதாசன் வீதிக்கு செல்லும் வழி உள்ளது.அங்கு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ரோட்டோரமாக மூன்று பெரிய துாங்க வாகை மரங்கள் உள்ளன. அடிவேர் எந்தப் பிடிமானமும் இல்லாமல் மரங்கள் சாயும் நிலை உள்ளது.இந்த வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். சாலையைக் கடக்கும் போது உயிர் பயத்துடனே செல்ல வேண்டி உள்ளது.கனமழை காரணமாக, கடந்த வாரத்தில் அவிநாசியில் மட்டும் 42 மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தது.பாரதிதாசன் வீதியின் நுழைவுப் பகுதியில் இருந்த பெரிய துாங்க வாகை மரம் முறிந்து விழுந்தது.இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ள மரங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை