உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 3வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

3வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

அனுப்பர்பாளையம்: -ஈரோட்டை சேர்ந்தவர் உலகநாதன்; திருப்பூர், பி.என்.,ரோடு பாண்டியன் நகரில் உள்ள சொந்தமான கட்டடத்தை வாடகைக்கு விட்டுள்ளார். கட்டடத்தின் மூன்றாவது மாடியில், 50க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.அதில், பீஹாரை சேர்ந்த சிவ்குமார், 25, என்பவர் நேற்று முன்தினம் இரவு மாடிப்படி அருகில் அமர்ந்து, கொண்டு உறவினர்களிடம் மொபைல் போனில் பேசி கொண்டு இருந்தார். அப்போது, அவர் கீழே தவறி விழுந்தார். அப்போது, அவரை காப்பாற்ற முயன்ற ராஜ்குமார், என்பவரும் கீழே தவறி விழுந்தார்.இதில், பலத்த காயம் அடைந்த சிவ்குமார், அதே இடத்தில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ராஜ்குமார், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து, திருமுருகன்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை