உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெங்களூரிலிருந்து திருப்பூருக்கு குட்கா கடத்திய மூவர் கைது

பெங்களூரிலிருந்து திருப்பூருக்கு குட்கா கடத்திய மூவர் கைது

திருப்பூர்,:கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில், திருப்பூர் மாவட்டம், மங்கலத்துக்கு, குட்கா கடத்தி வந்ததை, வாகன சோதனையில் போலீசார் கண்டுபிடித்தனர். மங்கலம் பகுதியில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது. இதுகுறித்த, மங்கலத்தை சேர்ந்த பக்ருதீன், 47, அவிநாசிபாளையத்தை சேர்ந்த அப்துல் ரஹீம், 43, மற்றும் பொல்லிகாளிபாளையத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன், 40, ஆகியோரை கைது செய்தனர். மூன்று பேரும் பெங்களூருவில் இருந்து குட்காவை ரகசியமாக வாங்கி வந்து, மங்கலத்தில் பதுக்கி விற்பனை செய்ய திட்டமிட்டது விசாரணையில் தெரிந்தது.அவர்களிடம் இருந்து, 1 டன் குட்கா, சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை