உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தக்காளி விலை உயர்ந்தது

தக்காளி விலை உயர்ந்தது

வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரம் முன்பு விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிடுகிடுவென சரிந்து, 13 கிலோ கொண்ட ஒரு பெட்டி, 150 ரூபாய்க்கு விற்றது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையால் தக்காளி அழுகத் துவங்கி உள்ளது. இதனால், தக்காளி வரத்து குறைந்துள்ளது. தக்காளி விலை ஒரு பெட்டிக்கு, 100 ரூபாய் உயர்ந்து தற்போது 250 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. மழை அளவைப் பொறுத்து தக்காளியின் விலை மாறுபடும். ஐப்பசி, கார்த்திகையில் அடை மழை பெய்யும். அப்போது தக்காளி விலை உச்சத்தை தொடும் வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ