உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு மருத்துவமனையில் தோல் நோய் பிரிவு இடமாற்றம் 

அரசு மருத்துவமனையில் தோல் நோய் பிரிவு இடமாற்றம் 

திருப்பூர்:அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நிர்வாக வசதிக்காக தோல் நோய் பிரிவு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை புதிய கட்டட வளாகத்தில், இரண்டாம் தளத்தில் தோல் நோய் பிரிவு செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த, 20 ம் தேதி முதல் இப்பிரிவு, அம்மா உணவகம் எதிரில் உள்ள, குழந்தைகள் பொது பிரிவு அருகே மாற்றப்பட்டுள்ளது.'தோல் நோய் பிரிவுக்கு வருவோர் வார்டுகளை தேடி அலைய சிரமப்படுகின்றனர். எனவே, தோல்பிரிவுக்கு வருவோருக்கு ஆலோசனை வழங்க டாக்டர், செவிலியர் உட்பட மருத்துவ குழு, மருந்து, மாத்திரைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது,' என மருத்துவ மனை அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி