உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திறக்கப்படாத மகளிர் சுகாதார வளாகம்; வீணடிக்கப்பட்ட நிதிக்குழு மானியம்

திறக்கப்படாத மகளிர் சுகாதார வளாகம்; வீணடிக்கப்பட்ட நிதிக்குழு மானியம்

உடுமலை;நிதிக்குழு மானியத்தில், புதுப்பிக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் திறக்கப்படாமல் வீணாகி வருவதால், விருகல்பட்டி கிராம மக்கள் வேதனையில் உள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டியில், 1,500க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். கிராமத்தில், சுகாதார சீர்கேடு நிரந்தரமாக உள்ளது. திறந்தவெளியில் குப்பை குவிக்கப்படுவதுடன், சுகாதார வளாகங்களும் பயன்பாடு இல்லாமல் கிடக்கிறது.கிராமத்திலுள்ள, எம்.ஜி.ஆர்., நகரில், மகளிர் சுகாதார வளாகம், 15வது நிதிக்குழு மானியத்தில், புதுப்பிக்கப்பட்டது. பணிகள் நிறைவு பெற்று, பல மாதங்களாகியும், சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.வளாகத்துக்கு இதுவரை மின் இணைப்பும் பெறப்படவில்லை. பூட்டியே கிடக்கும் கட்டடத்தை சுற்றிலும் புதர் மண்டிக்காணப்படுகிறது. சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வராததால், அப்பகுதி பெண்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.இது குறித்து, விருகல்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினரும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.நிதிக்குழு மானியத்தில் புதுப்பிக்கப்பட்டு, பயன்பாடு இல்லாமல் மகளிர் சுகாதார வளாகம் வீணாகி வருவது குறித்து, ஒன்றிய மண்டல அலுவலர்களும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.இவ்வளாகத்துக்கு மின் இணைப்பு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி, உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர, வலியுறுத்தி அக்கிராம மக்கள் திருப்பூர் கலெக்டருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி