உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உற்சவமூர்த்திகளுக்கு மகாபிேஷகம் :இன்று விடையாற்றி உற்சவம் 

உற்சவமூர்த்திகளுக்கு மகாபிேஷகம் :இன்று விடையாற்றி உற்சவம் 

திருப்பூர்;யாகசாலையில், 22 காலபூஜைகள் நிறைவுற்று, நேற்று மூலவர் மற்றும் உற்வசமூர்த்திகளுக்கு மகா அபிேஷகம், மஞ்சள் நீராட்டு நடைபெற்றது.திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாகத்தேர்த்திருவிழா, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கோலாகலமான தேரோட்டத்தை தொடர்ந்து, தெப்ப உற்சவம், மகாதரிசனம் நடைபெற்றது.விழாவின், 12ம் நாளான நேற்று, கோவம்ச சமூகநல அறக்கட்டளை சார்பில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விஸ்வேஸ்வர சுவாமி கோவில் யாகசாலையில், கலசங்களில் சுவாமியை ஆவாஹணம் செய்து, நான்மறை வேதங்களை ஓதி, சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜை நடத்தி வந்தனர்.மொத்தம், 22 கால யாகவேள்விகள் நடைபெற்று, மஞ்சள் நீராட்டு விழாவான நேற்று, யாகசாலை கலசங்களில் இருந்த புனித நீரால் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு மகா அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரபூஜைகளை தொடர்ந்து, விசாலாட்சியம்மன், சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து அருள்பாலித்தனர்.விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக, கோவில் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் சார்பில், இன்று விடையாற்றி உற்சவம் நடக்கிறது. காலை மற்றும் மாலை என, இருவேளை அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள், சுவாமி திருவீதியுலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ