உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதிய தடத்தில் பஸ் இயங்குமா?

புதிய தடத்தில் பஸ் இயங்குமா?

மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசு போக்குவரத்து கழகத்துக்கு அனுப்பிய மனு:பல்லடத்தில் இருந்து கோவை செல்பவர்கள், இரண்டு அல்லது மூன்று பஸ்கள் மாறிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. நேர விரயம், பொருட்செலவு மற்றும் மன உளைச்சல் ஏற்படுகிறது. பல்லடத்தில் இருந்து சூலுார், நீலாம்பூர் என, அவிநாசி ரோடு வழியாக கோவை செல்லும் வகையில், புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கினால், எண்ணற்ற கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் பயன்பெறுவர். சூலுார், நீலாம்பூர் வழியாக பஸ்களை இயக்கி, மாணவ மாணவியர், பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை