உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீர்வழிப்பாதை துார்வாரப்படுமா?

நீர்வழிப்பாதை துார்வாரப்படுமா?

அவிநாசி:அவிநாசி ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நஞ்சை தாமரை குளம் ஏ.டி., காலனிக்கு அருகில் மழைநீர் செல்லும் நீர் வழிப்பாதை உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் துார்வாரப்பட்டது.தற்போது முட்புதர்களால் மூடப்பட்டுள்ளதோடு நீர் வழித்தடமும் அழிந்து வருகிறது. கடந்த வாரம் பெய்த கனமழையால் மழைநீர் குடியிருப்புகளுக்குள் சூழ்ந்தது. இதனால், வீடுகளின் சுவர்கள் பலம் இழந்து இடிந்து விடுமோ என்ற அச்சத்துடன் அப்பகுதி மக்கள் உள்ளனர்.அருகில் உள்ள சிலர், மழைநீர் பாதையை மறைத்து சுவர் கட்டி உள்ளதால் மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. இதில், மழை நீர் செல்லும் பள்ளத்தில் உள்ள பலமிழந்து, மின்கம்பம் கீழே விழும் நிலையில் உள்ளது.வீடுகள் அதிகம் உள்ள பகுதியில் மின் கம்பம் சாயும் நிலையில் உள்ளதால் மின் கம்பத்துக்கு கான்கிரீட் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தி தரவும், மழைநீர் செல்லும் நீர் வழித்தடத்தை துார்வாரவும் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பழனிசாமி உட்பட பொதுமக்கள், பி.டி.ஓ., விஜயகுமாரிடம் மனு அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி