உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

அவிநாசி;அவிநாசி, கைகாட்டிப்புதுாரிலுள்ள பேக்கரி ஒன்றில் கட்டடம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.அப்பணியில், வேலாயுதம்பாளையம் ஊராட்சி, பெரிய கருணைபாளையம் கிராமத்தை சேர்ந்த சுதாகரன் மகன் கவுரிசங்கர் 19, என்பவர் ஈடுபட்டு உள்ளார். மேற்கூரை பகுதிக்கு தகர சீட்டு பொருத்தும் பணியின் போது எதிர்பாராத விதமாக, கவுரிசங்கர் வைத்திருந்த கம்பி, அருகில் சென்று கொண்டிருந்த உயரழுத்த மின் கம்பியில் உரசியது.இதில் மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்ட அவரை, அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்ததாக கூறினர்.அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை