உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நத்தம் நில வகைப்பிரிவுக்கு பூஜ்ஜிய மதிப்பு: மக்கள் அவதி

நத்தம் நில வகைப்பிரிவுக்கு பூஜ்ஜிய மதிப்பு: மக்கள் அவதி

பல்லடம்:தமிழகம் முழுவதும் 'நத்தம்' என்ற வகைப்பாட்டில் உள்ள நிலங்கள் அரசு நிலம் என பத்திரப்பதிவு இணையதளத்தில் பதிவாகி உள்ளதால் கிரயம் செய்ய முடியாத நிலை உள்ளது. வருவாய்த்துறை மென்பொருள் மேம்பாடு செய்வதற்காக அரசு நிலங்களை பத்திரப்பதிவு செய்வதை நிறுத்தி வைத்துள்ளதாகவும் அதில் 'நத்தம்' வகைப்பாடு நிலமும் சேர்த்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து பத்திர எழுத்தர்கள் கூறியதாவது:பத்திரப்பதிவுத்துறை மற்றும் வருவாய் துறை இணையதளங்கள் இணைந்து செயல்படுகிறது. இதனால் 'நத்தம்' நில வகைப்பாட்டை வருவாய் துறையினர் நிறுத்தி வைத்துள்ளதால் பத்திரப்பதிவு துறையினர் 'நத்தம்' வகை நிலத்தை பத்திரப்பதிவு செய்ய மறுக்கின்றனர். இதனால் ஏராளமான பத்திரங்கள் பதிவு செய்யப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. பத்திரப் பதிவு செய்ய முடியாததால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி