உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வங்கி கொள்ளை வழக்கு 3 பேருக்கு 14 ஆண்டு சிறை

வங்கி கொள்ளை வழக்கு 3 பேருக்கு 14 ஆண்டு சிறை

திருப்பூர்:பல்லடம் வங்கி கொள்ளை வழக்கில், மூன்று பேருக்கு, 14 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பளித்தது.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த வே.கள்ளிப்பாளையம் கிளை பாரத ஸ்டேட் வங்கியில், கடந்த 2020 பிப்., 24ம் தேதி லாக்கரை உடைத்து, 1,970 கிராம் தங்க நகைகள், 18.97 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, அனில்குமார், 38, முகமத் இஸ்ராகான், 30, பலராமகிருஷ்ணன், 35, கஜராஜ் சிங் மீனா, 32 ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.கொள்ளை வழக்கில், அனில்குமார், முகமத் இஸ்ராகான், பலராமகிருஷ்ணன் ஆகியோருக்கு, 14 ஆண்டு சிறை; கஜராஜ் சிங் மீனாவுக்கு, ஆறு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பல்லடம் ஜே.எம்., கோர்ட் மாஜிஸ்திரேட் சித்ரா தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை