உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / லாரி -- வேன் மோதல் :2 பேர் படுகாயம்

லாரி -- வேன் மோதல் :2 பேர் படுகாயம்

பல்லடம்;காரணம்பேட்டையில், லாரி, ஈச்சர் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில், இருவர் காயமடைந்தனர்.பழநியை சேர்ந்த கருப்பையா மகன் ரங்கநாதன் 45. லாரி டிரைவர். நேற்று முன்தினம் நள்ளிரவு, பல்லடத்தில் இருந்து செங்கற்கள் ஏற்றியபடி கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, பல்லடத்தை சேர்ந்த மாரன் மகன் கிட்டான், 47 ஓட்டிச்சென்ற வேனுடன், லாரி உரசியது.இதனால், இரு வாகனங்களும், ரோட்டில் வைக்கப்பட்டிருந்த பேரி கார்டுகளில் மோதி நின்றன. இந்த விபத்தில், ரங்கநாதன் மற்றும் கிட்டான் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து, பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை