உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  நகை பறித்தவருக்கு 26 ஆண்டு சிறை

 நகை பறித்தவருக்கு 26 ஆண்டு சிறை

திருப்பூர்: பொங்கலுார், அலகுமலை அருகே சேமலைக்கவுண்டம்பாளையம் பகுதியில் வசிப்பவர் இந்திராணி, 47. கடந்த, 2020 ஜூலை, 23ம் தேதி தனது வீட்டின் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத இருவர், கத்தியை காட்டி மிரட்டியும், தாக்கியும், ஒன்னேகால் சவரன் நகைகளை பறிந்து சென்றுள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அவிநாசிபாளையம் போலீசார், இதில் தொடர்புடைய திண்டுக்கல், சிலுக்குவார் பட்டியை சேர்ந்த சசிக்குமார் என்கிற வீரமணி, 27, திருப்பூர், சாரதா நகரை சேர்ந்த ஒரு சிறுவனை கைது செய்தனர். பல்லடம் சப் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில், வீரமணிக்கு, 26 ஆண்டு சிறை, 10 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை