உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விளையாட்டு போட்டி: 34 பள்ளிகள் பங்கேற்பு

விளையாட்டு போட்டி: 34 பள்ளிகள் பங்கேற்பு

திருப்பூர்:திருப்பூர் பெம் பள்ளியில் நடந்த ஜூனியர் விளையாட்டு போட்டியில், 34 சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கூட்டமைப்பான சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் சார்பில், ஜூனியர் விளையாட்டு போட்டிகள், திருப்பூர், காங்கயம் ரோட்டில் உள்ள பெம் பள்ளியில் நேற்று நடந்தது.இதில், 34 பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் போட்டிகள், இருபாலருக்கும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம், விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ