உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிணற்றுக்குள் பாய்ந்த கார் நீரில் மூழ்கி விவசாயி பலி..

கிணற்றுக்குள் பாய்ந்த கார் நீரில் மூழ்கி விவசாயி பலி..

உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை, ஆத்துக்கிணத்துப்பட்டியை சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணியம், 32. இவர், நேற்று முன்தினம் இரவு, தன் காரில், பூளவாடி - ஒட்டமடம் ரோட்டில் சென்றார்.அப்போது, தளிஞ்சி காட்டு தோட்டம் அருகே, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், ரோட்டோரத்தில் சிவராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றுக்குள் பாய்ந்தது.தகவல் கிடைத்ததும், உடுமலை தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, 70 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த காரை மீட்க கயிறு கட்டி இறங்கினர்.அப்போது மூழ்கிய காருக்குள் பாலசுப்ரமணியம் இறந்து கிடந்தது தெரியவந்தது. காரையும், சடலத்தையும், கிரேன் வாயிலாக கிணற்றில் இருந்து மீட்டனர். குடிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை