உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மான் கொம்பு, தந்தத்துடன் நான்கு பேர் கும்பல் கைது

மான் கொம்பு, தந்தத்துடன் நான்கு பேர் கும்பல் கைது

தாராபுரம்:மான் கொம்பு, யானை தந்தங்களை விற்க முயன்ற நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்தனர். தாராபுரம் பகுதியில் மான் கொம்பு விற்பனை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்வதாக, காங்கேயம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காங்கேயம் வனச்சரக அலுவலர் மௌனிகா தலைமையிலான வனத்துறையினர், தாராபுரம் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனர். தாராபுரம்-அலங்கியம் சாலையில் இரு பைக்குகளில் வந்த நான்கு பேரை மடக்கி விசாரித்தனர். அவர்களிடமிருந்த சாக்குப் பையை சோதனை செய்ததில், யானை தந்தம், மான் கொம்புகள் இருந்தன.விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் பழநி, குதிரையாறு சுப்பிரமணி, 60, தேனரசு, 36; பாப்பம்பட்டி செல்வராஜ், 50; தாராபுரம், அலங்கியம் சாலை ரமேஷ், 52, என தெரிந்தது. கடந்த, 2019ல், ஆற்றுப்பகுதியில் தங்களுக்கு கிடைத்த மான் கொம்பு மற்றும் தந்தங்கள் என்பதும், விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிந்தது. நால்வரையும் கைது செய்த வனத்துறையினர், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி தாராபுரம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை