உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் :முன்கூட்டிய விழிப்புணர்வு அவசியம் 

பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் :முன்கூட்டிய விழிப்புணர்வு அவசியம் 

உடுமலை;பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை, திறந்த வெளியில் வீசி எறிவதை தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பழநி பாலதண்டாயுதபாணி கோவிலில், வரும், 25ல், தைப்பூசத் திருவிழா நடக்கிறது. இதற்கென, பக்தர்கள், பாதயாத்திரையாக பழநிக்கு சென்று திரும்புகின்றனர்.குறிப்பாக, பாலக்காடு, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், உடுமலை மார்க்கமாக, பாதயாத்திரை செல்கின்றனர்.அவர்களில் சிலர், வழி நெடுகிலும், உணவு எடுத்துவரப் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகள், காலியான தண்ணீர் பாட்டில்களை விளைநிலங்களில் வீசிச் செல்கின்றனர். இதனால், விளைநிலங்கள் மண்ணின் தன்மை பாதிக்கப்படுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.இதனை தடுக்கும் வகையில், அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.தன்னார்வலர்கள் கூறுகையில், 'பழநி கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை இனி வரும் நாட்களில் அதிகரிக்கும். ஆங்காங்கே, அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு பேனர்கள் வைக்க துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை